தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 4 March 2021 1:21 PM IST (Updated: 4 March 2021 1:21 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. அந்த கட்சி பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தலில் போட்டியிட்டது.

இதற்கிடையே தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இது தொடர்பாக ஏற்கெனவே அரவிந்த் கெஜ்ரிவாலும், கமல்ஹாசனும் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

Next Story