மேற்கு வங்காளத்தில் 200க்கும் மேற்பட்ட வெற்றிகளுடன், மே 3-ம் தேதி பாஜக முதல்-மந்திரி இருப்பார் - தேஜஸ்வி சூர்யா + "||" + 200 Plus Seats In Bengal BJP Chief Minister On May 3 - Tejasvi Surya
மேற்கு வங்காளத்தில் 200க்கும் மேற்பட்ட வெற்றிகளுடன், மே 3-ம் தேதி பாஜக முதல்-மந்திரி இருப்பார் - தேஜஸ்வி சூர்யா
மேற்கு வங்காளத்தில் 200க்கும் மேற்பட்ட வெற்றிகளுடன், மே 3-ம் தேதி பாஜகவை சேர்ந்தவர் முதல்-மந்திரி இருப்பார் என்று தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 29-ந் தேதி முடிகிறது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகளுடன், மே 3-ம் தேதி பாஜகவை சேர்ந்தவர் முதல்-மந்திரி இருப்பார் என்று தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “மேற்கு வங்காள முதல்-மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜியின் பதவிக் காலம் எண்ணப்பட்டு வருகிறது. மேற்கு வங்காளத்தில் இனி கலவரம் மற்றும் அரசியல் கொலைகள் இருக்காது, ஏனெனில் பாஜக அதன் முதலமைச்சரைக் கொண்டிருக்கும். நாங்கள் 200 க்கும் குறைவான இடங்களைப் பெற மாட்டோம், நாங்கள் பெறக்கூடிய இடங்கள் நிச்சயமாக 200க்கும் அதிகமாக இருக்கும். நாங்கள் இன்று இதற்கான பணிகளை தொடங்கவில்லை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டோம்” என்று தேஜஸ்வி சூர்யா கூறினார்.