நந்திகிராம் தொகுதியில் 11-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்


நந்திகிராம் தொகுதியில் 11-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 4 March 2021 8:21 PM IST (Updated: 4 March 2021 8:21 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலையொட்டி நந்திகிராம் தொகுதியில் 11-ம் தேதி மம்தா பானர்ஜி வேட்புமனு தாக்கல் செய்ய்கிறார்.

கொல்கத்தா, 

மேற்குவங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்திட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இங்கு ஆளும் திரிணாமுல் காங். கட்சியின் மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 

வரும் சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து போட்டியிட்டு தோற்கடிப்பேன் என சவால் விடுத்து உள்ளார். இதனை மம்தாவும் ஏற்று நந்திகிராமில் போட்டியிடுவேன் என அறிவித்தார்.

இந்நிலையில் வரும் 11-ம் தேதி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்.,கட்சியினர் செய்து வருகின்றனர்.


Next Story