தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று புதிதாக 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Kerala records 2,616 new cases of Covid-19; active cases reach 44,441

கேரளாவில் இன்று புதிதாக 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் இன்று புதிதாக 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று மேலும் 2,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,69,661 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 4,255 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 4,156 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10,20,671 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 44,441 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முன்னதாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தினசரி கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த ஆறு மாநிலங்களில் புதிய கொரோனா பாதிப்புகள் 85.51 சதவீதம் உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று மேலும் 67,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 67,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கேரளாவில் தடுப்பூசி முகாமில் குவிந்த பொதுமக்கள் - டோக்கன் விநியோகத்தின் போது தள்ளுமுள்ளு
கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் - கோவா அரசு
கோவா மாநிலத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
5. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ஒருநாள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.