கர்நாடக முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் துபாயில் தஞ்சம்; பரபரப்பு தகவல்கள்
முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் துபாயில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், அங்கு அவருக்கு ரூ.25 கோடி கொடுத்து சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரமேஷ் ஜார்கிகோளி ராஜினாமா
கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவின் மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றியவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர் வேலை வாங்கி தருவதாக இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோ வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி மேலிடம் உத்தரவின்பேரில் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரமேஷ் ஜார்கிகோளியின் வீடியோவை வெளியிட்ட சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் புகாரும் அளித்து இருந்தார். ஆனால் அந்த புகார் மீது இன்னும் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட பெண் வந்து புகார் அளித்தால் தான் வழக்குப்பதிவு செய்வோம் என்று போலீசார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரூ.25 கோடிஇந்த நிலையில் ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச வீடியோ வெளியான விஷயத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது அந்த வீடியோ 9 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், அந்த வீடியோ ரஷ்யாவில் இருந்து வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் ரமேஷ் ஜார்கிகோளியுடன் நெருக்கமாக இருந்த இளம்பெண் தற்போது தனது குடும்பத்தினருடன் துபாயில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த இளம்பெண்ணுக்கு ரூ.25 கோடி கொடுத்து, துபாயில் சகல வசதிகளும் செய்து கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை ரமேஷ் ஜார்கிகோளியின் எதிரிகள் செய்து கொடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசியலில் பரபரப்புமேலும் அரசியல் ஆதாயங்களுக்காக ரமேஷ் ஜார்கிகோளியை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த வீடியோ வெளியானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ரமேஷ் ஜார்கிகோளி வீடியோ பற்றி தினமும் புது புது தகவல்கள் வெளிவருவது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.