பாபர் மசூதி இடிப்பு குறித்து உத்தவ் தாக்கரேவின் கருத்து: முஸ்லிம் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்; அபு ஆஸ்மி வலியுறுத்தல்


பாபர் மசூதி இடிப்பு குறித்து உத்தவ் தாக்கரேவின் கருத்து: முஸ்லிம் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டும்; அபு ஆஸ்மி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 March 2021 8:56 AM IST (Updated: 5 March 2021 8:56 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு குறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என சமாஜ்வாடி கட்சி தலைவர் அபு ஆஸ்மி வலியுறுத்தி உள்ளார்.

உத்தவ் தாக்கரே பேச்சு

முதல் - மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சட்டசபையில் பா.ஜனதா அடிக்கடி பால்தாக்கரேவின் பெயரை எடுப்பதையும், பால்தாக்கரேவின் இந்துத்வாவை சிவசேனா நினைவில் கொள்ள வேண்டும் என கூறி வருவது குறித்தும் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், "பால்தாக்கரேவின் இந்துத்வா சென்டியோ (தலை குடுமி) அல்லது பூணூலோ அல்ல. பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது டாம், டிக், ஹாரி ஓடிவிட்டனர். ஆனால் பால் தாக்கரே நின்றார். சிவசேனாவினர் பாபர் மசூதியை இடித்து இருந்தால் அதற்காக பெருமை அடைகிறேன் என பால் தாக்கரே கூறினார் " என பேசினார்.

முஸ்லிம் மந்திரிகள்

முதல்-மந்திரியின் இந்த பேச்சுக்கு மராட்டிய சமாஜ்வாடி கட்சி தலைவர் அபுஆஸ்மி கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி என்பதை மறந்துவிட்டார். சுப்ரீ்ம் கோர்ட்டு அதன் தீர்ப்பில் பாபர் மசூதியை இடித்தது, அதற்குள் சிலையை வைத்தது குற்றச்செயல் என குறிப்பிட்டுள்ளது. எனவே குற்றச்செயலை முதல்-மந்திரி சட்டசபையில் ஏற்றுக்கொண்டது அதிருப்தி அளிக்கிறது. முதல்- மந்திரி சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மாநிலத்தில் அமல்படுத்தப்படாது என கூறினார். காங்கிரசும், தேசியவாத காங்கிசுரம் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றனர். தற்போது நீங்கள் தான் ஆட்சியில் உள்ளீர்கள். இந்த பிரச்சினைளுக்காக வெட்கப்பட்டு முஸ்லிம் மந்திரிகளாவது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதேபோல முதல்-மந்திரியின் பேச்சுக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபமும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.


Next Story