இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கோ வேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உள்பட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த 1 ஆம் தேதி முதல் 60-வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் இணை நோய்கள் உள்ள 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பெற்றும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 10.93 லட்சம் பேருக்கு நேற்று ஒருநாளில் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மராட்டியம், கேரளா, பஞ்சாப், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
Related Tags :
Next Story