மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது.
லக்னோ,
60 வயதை கடந்தவர்களுக்கும், பிற நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த 1-ந் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள், முதல்-மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் என அடுத்தடுத்து பல பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்தநிலையில், நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருடைய மனைவி குர்சரண் கவுரும் அங்கேயே தடுப்பூசி போட்டுக்கொண்டார். கர்நாடக கவர்னர் வஜுபாய் வாலா, பெங்களூரு கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். பீகாரில் உள்ள சதார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் கிரிராஜ் சிங்கிற்கு போடப்பட்டது.
Related Tags :
Next Story