நேபாளத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் உயிரிழப்பு
நேபாளத்தில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார்.
லக்னோ,
இந்திய-நேபாள எல்லையில் நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். நேபாள காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதில் பலியானவர் கோவிந்தா சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
பப்பு சிங் மற்றும் குர்மீத் சிங் ஆகிய இருவருடன் கோவிந்தா சிங் நேபாளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, நேபாள காவல்துறையினருடன் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேபாள போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கோவிந்தா சிங் உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் எல்லையைத் தாண்டி தனது உயிரைக் காப்பாற்ற இந்தியாவிற்குள் நுழைந்தார், மூன்றாவது நபர் காணவில்லை. இந்த தகவலை உத்தர பிரதேச போலீசார் தெரிவித்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை எனவும் உ.பி போலீசார் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story