மார்ச் 6-ம் தேதி மத்தியப் பிரதேசம் செல்கிறார் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 6-ம் தேதி மத்தியப் பிரதேசம் செல்கிறார்.
போபால்,
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மார்ச் 6-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளார்.
அங்கு ஜாபல்பூர், தாமோ மாவட்டங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மார்ச் 6-ம் தேதி தனி விமானம் மூலம் குடியரசுத் தலைவர் மத்தியப் பிரதேசத்திற்கு வருகை தரவுள்ளார்.
மார்ச் 6-ம் தேதி ஜாபல்பூர் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மார்ச் 7-ம் தேதி தாமோ மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் தொடர்ந்து நிகழ்சிகளை முடித்துக்கொண்டு டெல்லி புறப்படுகிறார்.
Related Tags :
Next Story