சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சி அழைத்தால் பிரசாரம் செய்வேன் - குலாம் நபி ஆசாத்


சட்டப்பேரவைத் தேர்தல்களில் கட்சி அழைத்தால் பிரசாரம் செய்வேன்  -  குலாம் நபி ஆசாத்
x
தினத்தந்தி 5 March 2021 9:00 PM IST (Updated: 5 March 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் வெற்றி முக்கியம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27 முதல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில்,

எதிர் வரும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சி அல்லது தனிநபர் என்னை அழைத்தால், அழைக்கும் இடமெல்லாம் சென்று பிரசாரம் செய்வேன் என்றார்.

Next Story