தேசிய செய்திகள்

வடிவேலு நகைச்சுவை காட்சி போல் சம்பவம் : ஒரு பெண்ணை விரும்பிய 4 பேர் : குலுக்கள் முறையில் மணமகன் தேர்ந்தெடுப்பு + "||" + UP: Panchayat in Rampur holds 'lucky draw' to select groom for girl who eloped with four men

வடிவேலு நகைச்சுவை காட்சி போல் சம்பவம் : ஒரு பெண்ணை விரும்பிய 4 பேர் : குலுக்கள் முறையில் மணமகன் தேர்ந்தெடுப்பு

வடிவேலு நகைச்சுவை காட்சி போல் சம்பவம் : ஒரு பெண்ணை  விரும்பிய 4 பேர் : குலுக்கள் முறையில் மணமகன் தேர்ந்தெடுப்பு
மருதமலை படத்தில் வரும் வடிவேல் நகைச்சுவை காட்சி போல் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணை 4 இளைஞர்கள் திருமணம் செய்ய விரும்பி உள்ளனர். பின்னர் அதிர்ஷட குலுக்கள் முறையில் மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராம்பூர்

உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த 4 இளைஞர்களுடன் ஊரை விட்டு தப்பி சென்றார். மீண்டும் அப்பெண்ணை கிராமத்திற்கு அழைத்து வந்த ஊர்க்காரர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டி அந்த பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்று குலுக்கல் முறையில் சீட்டு போட்டு தேர்வு செய்துள்ளனர். 

அசிம்நகரை சேர்ந்த 4 இளைஞர்களும் அருகாமையில் உள்ள தண்டா போலீஸ் நிலைய எல்லையைச் சேர்ந்த அந்தப் பெண்ணை காதலித்துள்ளனர். 4 பேரும் அந்த பெண்ணுடன் அவர்களின் கிராமத்திற்கு வந்து இரண்டு நாட்களுக்கு அப்பெண்ணை தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் அந்த 4 பேரும் தங்க வைத்துள்ளனர். இதற்கிடையே தங்கள் மகளை காணாததால் போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்க அவரின் பெற்றோர்கள் முயற்சித்த போது இளைஞர்களின் கிராமத்தினர் அவர்களை தடுத்துள்ளனர்.

இதற்கிடையே கிராம மக்கள் அந்த 4 இளைஞர்களிடமும் தனித்தனியாக பேசி யாராவது ஒருவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக இளைஞர்களிடம் பேசியும் யாரும் ஒருமித்த கருத்து ஒற்றுமைக்கு வராமல் இருந்துள்ளனர். மேலும் யாராவது ஒரு இளைஞரை தேர்வு செய்து திருமணம் செய்துகொள்ளுமாறு அப்பெண்ணிடம் ஊர்மக்கள் பேசிய போதும் அவரும் யாரையும் தேர்வு செய்யவில்லை,

இதனையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் பெண் எந்த இளைஞருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சீட்டு குலுக்கி போட்டு முடிவு செய்து கொள்ளலாம் என பஞ்சாயத்தார் ஒரு முடிவுக்கு வந்தனர். இதற்கு அனைத்து தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து  4 இளைஞர்களின் பெயரையும் எழுதி மடித்து ஒரு குவளையில் போட்டனர். பின்னர் அக்கிராமத்தில் இருந்த சிறுவன் ஒருவனை அதில் இருந்து சீட்டு எடுக்குமாறு அவர்கள் கூறியதன் பேரில் அதில் இரு இளைஞரை குலுக்கல் முறையில் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மருதமலை  படத்தில் வரும் வடிவேல் நகைச்சுவை  காட்சியை அப்படியே கண் முன் காட்டுவது போல்  இந்த சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரபிரதேசத்தில் கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய் புகார் அளித்த 2 பேர் கைது
கடந்த மாதம் 19-ந் தேதி, உத்தரபிரதேசம் வழியாக ஒடிசாவுக்கு 2 கேரள கன்னியாஸ்திரிகள் 2 பெண்களுடன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்று கொண்டிருந்தனர்.
2. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு
அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண்
3. மாடியில் இருந்து விழுந்தவரை காப்பாற்றும் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சம்பவம் -வீடியோ
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சாகச சம்பவம் ஒன்றை நிகழ்த்தி கேரளாவில் பாபு என்பவர் பிரபலமடைந்து உள்ளார்.
4. கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய பெண்
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் குளியலறையில் இறந்துகிடக்க, அவரது வயிற்றிலிருந்த குழந்தை மாயமாகியிருந்தது.
5. சினிமா தியேட்டர்களை திறக்க கோரி விருது வழங்கும் மேடையில் நடிகை நூதன போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது தியேட்டர்களை அரசாங்கம் பல மாதங்களாக மூடியதை எதிர்த்து பாரிஸில் நடைபெற்ற சீசர் விருது வழங்கும் விழாவின் போது பிரெஞ்சு நடிகை கொரின் மசீரோ மேடையில் நிர்வாணமாக வெளியேறினார்.