கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பாஜக எம்.பி. ஹேம மாலினி
நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
மும்பை,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வ்ருகிறது. மொத்தம் 1 கோடியே 94 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், நடிகையும், மதுரா தொகுதி பாஜக எம்.பி.யுமான ஹேம மாலினி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 72 வயதான ஹேம மாலின் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பொதுமக்களுடன் இணைந்து நானும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டேன்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story