பா.ஜனதாவை சேர்ந்த பிரக்யா சிங் எம்.பி. மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்


பா.ஜனதாவை சேர்ந்த பிரக்யா சிங் எம்.பி. மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 7 March 2021 3:28 AM IST (Updated: 7 March 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவை சேர்ந்த பிரக்யா சிங் எம்.பி. விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டார்.

போபால்,

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கியவரும், பா.ஜனதாவை சேர்ந்த பெண் எம்.பி.யுமான பிரக்யா சிங்குக்கு நேற்று மாலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

உடனே அவர் போபாலில் இருந்து அரசு விமானம் மூலம் மும்பைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு கோகிலாபென் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப்பின், சில உடல்நல பிரச்சினைகளால் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரக்யா சிங், கடந்த 1-ந்தேதிதான் போபால் திரும்பியிருந்தார்.

அவரது உடல்நல பிரச்சினைகளால்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தினந்தோறும் கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

-------------

பிட்-பார்ஆல்

Next Story