2வது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட சுகாதார அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி


2வது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட சுகாதார அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 7 March 2021 3:42 AM IST (Updated: 7 March 2021 3:42 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் 2வது டோஸ் தடுப்பூசி எடுத்து கொண்ட சுகாதார அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஆமதாபாத்,

குஜராத்தில் காந்திநகர் பகுதியில் தேகாம் தாலுகாவை சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கடந்த ஜனவரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.  பின்னர் 2வது டோஸ் தடுப்பூசி கடந்த பிப்ரவரி 15ந்தேதி அவருக்கு செலுத்தப்பட்டது.

அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது.  இதனால் அவரது மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.  அதில், அவருக்கு கடந்த பிப்ரவரி 20ந்தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுபற்றி தலைமை சுகாதார அதிகாரி சோலங்கி கூறும்பாழுது, லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட அந்நபர் வருகிற திங்கட்கிழமை பணியில் சேர தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்தப்பட்ட பின்னர் உடலில் ஆன்டிபாடிகள் உற்பத்தியாக பொதுவாக 45 நாட்கள் எடுக்கும்.  அதனால் பாதுகாப்பிற்காக, தடுப்பூசி போட்டப்பட்ட பின்னரும் சமூக இடைவெளி உள்பட அனைத்து கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்றுவதுடன் முக கவசமும் அணிய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Next Story