பா.ஜ.க. பிரசார கூட்டம்: மோடியுடன் மிதுன் சக்கரவர்த்தி பங்கேற்பா?


பா.ஜ.க. பிரசார கூட்டம்: மோடியுடன் மிதுன் சக்கரவர்த்தி பங்கேற்பா?
x
தினத்தந்தி 7 March 2021 11:46 AM IST (Updated: 7 March 2021 11:46 AM IST)
t-max-icont-min-icon

8 கட்ட தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்காளத்தில், தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.

கொல்கத்தா,

8 கட்ட தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்காளத்தில், தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த தருணத்தில் கொல்கத்தாவில் உள்ள படை அணிவகுப்பு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

பிரமாண்ட அளவில் நடக்கிற இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியும் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதை பா.ஜ.க. வட்டாரங்கள் உறுதிபடுத்துகின்றன. மிதுன் சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவி வகித்தவர். 

ஆனால் அவர் பின்னர் அரசியலில் இருந்து விலகி விட்டார். இப்போது 70 வயதான மிதுன் சக்கரவர்த்தி, அரசியலில் தனது 2-வது இன்னிங்சை பா.ஜ.க.வில் சேர்ந்து தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.

Next Story