கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நாக்பூர்,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வ்ருகிறது. இதுவரை மொத்தம் 2 கோடியே 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 70 வயதான மோகன் பகவத் மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருடன் இணைந்து ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலளார் சுரேஷ் பாக்யஜீ-யும் கொரோனா
தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story