மக்கள் மருந்தகத்தில், குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் - பிரதமர் மோடி


மக்கள் மருந்தகத்தில், குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 March 2021 1:18 PM IST (Updated: 7 March 2021 1:18 PM IST)
t-max-icont-min-icon

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

புதுடெல்லி,

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-  

மக்கள் மருந்தகத்தில், ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் விலை  10 ஆயிரமாக அதிகரிக்கப்படும். 

இந்த மருந்தங்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் உருவாகும். மக்கள் மருந்தகங்களுக்கான ஊக்கத்தொகை 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. 

இதனுடன், உற்பத்தி அதிகரிக்கப்படும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அனைத்து தரப்பு மக்களுக்கும் குறைந்த விலையில்  நல்ல மருத்துவம் கிடைக்க அரசு மிகுந்த கவனம் செலுத்துவதோடு உள்கட்டமைப்பையும் மேம்படுத்துகிறது” என்றார். 


Next Story