மராட்டியம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: மத்திய அரசு


மராட்டியம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்: மத்திய அரசு
x
தினத்தந்தி 7 March 2021 9:01 AM GMT (Updated: 7 March 2021 9:01 AM GMT)

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு படிப்படியாக மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவானது. குறிப்பாக மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று உயரத்தொடங்கியுள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த சூழலில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு கூறியதாவது: -  மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினமும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மாநிலங்களில் ஏற்படும் பாதிப்பு  மொத்த பாதிப்பில் 84.1 சதவீதமாக உள்ளது. 

ராஜஸ்தான், உத்தர பிரதேசம், சண்டிகார், கோவா, உத்தரகாண்ட், ஒடிசா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், சிக்கிம், லட்சத்தீவு, லடாக், மணிப்பூர், மேகலயா, நாகலாந்து, திரிபுராம், மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், அருணாசல பிரதேசம் ஆகிய இடங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதிப்பு பதிவாகவில்லை.

Next Story