கடமை தவறிய அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் - மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு
கடமை தவறிய அதிகாரிகளை மூங்கில் தடியால் அடியுங்கள் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பேச்சால் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா,
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை மந்திரியாக இருப்பவர் கிரிராஜ் சிங். பீகார் மாநிலம் பெகுசராயில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கிரிராஜ் சிங் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
"எனது துறையை சார்ந்த அதிகாரிகள் பலரும் பொதுமக்களின் குறைகளை கண்டுகொள்வதில்லை என எனக்கு புகார் வருகிறது. அப்போது அவர்களிடம் நான் இது போன்ற சிறிய விஷயங்களுக்கு எல்லாம் பிடிஓ, எஸ்டிஎம், ஆட்சியர், கிராம பிரதிநிதிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மக்கள் பணி செய்யக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஒருவேளை அவர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் மூங்கில் தடியால் அவர்களின் தலையில் அடியுங்கள். அப்போதும் அவர்கள் அந்தப் பணியைச் செய்யாவிட்டால் பிரச்சினையை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் என் பலத்தைக் காட்டுகிறேன் என்றார்.
இவ்வாறு மத்திய மந்திரி , 'அரசு அதிகாரிகளை அடியுங்கள்' என பேசியிருப்பது சர்ச்சையை எழுப்பி உள்ளது.
Related Tags :
Next Story