தேசிய செய்திகள்

மார்ச் 07: டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் + "||" + March 07: Today's corona damage situation in Delhi, Andhra Pradesh, Karnataka

மார்ச் 07: டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

மார்ச் 07: டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
டெல்லி, ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

டெல்லி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தவர்களின் இன்றைய நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஆந்திர மாநிலத்தில் இன்று புதிதாக 136 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,90,692 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 58 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 8,82,520 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 7,174 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 3 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் எண்ணிக்கை 12,362 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 9,55,015 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,35,772 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 6,862 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் இன்று புதிதாக 286 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6,41,101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் பலியாகினர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 10,921 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 260 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தமாக 6,28,377 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு தற்போது 1,803 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வேகமாக பரவுகிறது: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லியில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வேகமாக பரவுவதாக முதல் மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2. ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீர் மே முதல் வாரத்தில் திறக்கப்படுகிறது; மாதம் 1 டி.எம்.சி. வழங்க இருப்பதாக அதிகாரிகள் தகவல்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருகிற மே மாதம் கிருஷ்ணா நதிநீர் திறக்கப்படுகிறது. ஆந்திர மாநில அரசு மாதம் 1 டி.எம்.சி. வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க இருப்பதாக பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
3. சத்தீஷ்கர் என்கவுன்டர்: ஆந்திராவில் பாதுகாப்பு அதிகரிப்பு
மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
4. கர்நாடகத்தில் தற்போதைக்கு ஊரடங்கு இல்லை: எடியூரப்பா திட்டவட்டம்
கர்நாடகத்தில் எக்காரணத்தை கொண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
5. மார்ச் 15: டெல்லி, ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
டெல்லி, ஆந்திராவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் வெளியிடப்பட்டது.