சர்வதேச மகளிர் தினம்; தெலுங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை


சர்வதேச மகளிர் தினம்; தெலுங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை
x
தினத்தந்தி 8 March 2021 3:29 AM IST (Updated: 8 March 2021 3:29 AM IST)
t-max-icont-min-icon

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தெலுங்கானாவில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் மார்ச் 8 விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஐதராபாத்,

சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு தெலுங்கானா முதல் மந்திரி கே. சந்திரசேகர ராவ், தலைமை செயலாளர் சோமேஷ் குமாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளார்.

அதன்படி, முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், மார்ச் 8ல் மகளிர் தினத்தினை முன்னிட்டு மாநிலத்தில் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் விடுமுறை என அரசு அறிவிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்களுடன் அனைத்து துறையிலும், பெண்கள் போட்டி போடுகின்றனர்.  சிறந்தும் விளங்குகின்றனர்.  மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ள பெண்கள், வாய்ப்பு வழங்கப்பட்டால் பல ஆச்சரியங்களை செய்வார்கள் என்றும் முதல் மந்திரி கூறியுள்ளார் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Next Story