மராட்டிய சட்ட சபை ஊழியர்கள் எ.ம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை- 36 பேருக்கு தொற்று


மராட்டிய சட்ட சபை ஊழியர்கள் எ.ம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை-  36 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 8 March 2021 9:50 AM IST (Updated: 8 March 2021 10:10 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்ட சபை ஊழியர்கள், எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மும்பை,

மராட்டிய சட்ட சபை இன்று கூடுகிறது. இதையொட்டி கடந்த 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மராட்டிய சட்ட சபை ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,746- கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது.

 இதில், 36- பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதேபோல்,  கடந்த வாரமும்  3,900 - பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதில் 46- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. 

மராட்டிய சட்ட சபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. துணை முதல் மந்திரி அஜித் பவார் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவது நினைவு கொள்ளத்தக்கது. 

Next Story