எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதம் தேவை: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


எரிபொருள் விலை உயர்வு குறித்து விவாதம் தேவை: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 March 2021 11:49 AM IST (Updated: 8 March 2021 12:06 PM IST)
t-max-icont-min-icon

எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது.  மாநிலங்களவை காலை நேர அமர்விலும், மக்களவை மாலையும் திட்டமிடப்பட்டு இருந்துது.  அதன்படி, இன்று காலை  மாநிலங்களவை இன்று காலை  கூடியதும் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையின் மைப்பகுதிக்கு சென்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், மத்திய அரசு இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, முதல் நாளிலேயே கடுமையான நடவடிக்கைகளை தாம் எடுக்கவிரும்பவில்லை எனக் கூறினார். இதனால், அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, அவை 11 மணி வரை கூடியது. பின்னர் அவை கூடியதும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், “  பெட்ரால் விலை 100 ரூபாயை தொட்டு விட்டது. டீசல் விலை 80 ரூபாய்க்கு அதிகமாக விற்கிறது. சமையல் வேஸ் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி மூலம் நாடுமுழுவதும் 21 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதனை கணிசமாக குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை குறையும்” என்றார்.  இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பெட்ரால், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.  இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. 


Next Story