சத்தீஷ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி
சத்தீஷ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்,
இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிதாக பாதிப்புக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,57,853 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் 14,278 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,82,798 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 1,88,747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. அரசியல் கட்சியினரும் வைரசுக்கு இலக்காகி வருகின்றனர். அந்த வகையில், சத்தீஷ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ். சிங் தியோவிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கொரோனா பரவியுள்ளது என்ற தகவலை டி.எஸ். சிங் தியோ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட்ள்ளார். மேலும், வைரஸ் எந்த வித அறிகுறிகளும் இன்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story