மராட்டியம்: கொரோனா பாதிப்பு ஆபத்தான நிலையில் உள்ளது. தேவைபட்டால் சில மாவட்டங்களில் ஊரடங்கு சுகாதாரத்துறை அமைச்சர்
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சூழ்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் சில மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்படும் என மராட்டிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறி உள்ளார்.
மும்பை
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவானது.
குறிப்பாக மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று உயரத்தொடங்கியுள்ளது. இதனால், தடுப்பூசி போடும் பணியை விரைவு படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தினமும் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மாநிலங்களில் ஏற்படும் பாதிப்பு மொத்த பாதிப்பில் 86.25 சதவீதமாக உள்ளது” என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மராட்டிய மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 22,19,727 ஆகும். மும்பையின் எண்ணிக்கை இப்போது 3,33,569 ஆக உள்ளது. மும்பையில் கடைசியாக 1,361 கொரோனா பாதிப்புகள் அக்டோபர் 24 அன்று பதிவாகியுள்ளன. மாநிலத்தைப் பொறுத்தவரை, கடைசியாக 11,141 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் அக்டோபர் 16 அன்று பதிவாகியுள்ளன. மும்பையின் பாதிப்பு விகிதம் இப்போது 0.3% ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இரட்டிப்பு நேரம் 231 நாட்களாக குறைந்துள்ளது.
தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் சென்றால் ஏப்ரல் மாதத்திற்குள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 2 லட்சமாக இருக்கும்.
மராட்டியத்தின் 16 மாவட்டங்களில் மாநில சராசரியை விட அதிக நேர்மறை விகிதத்தைக் கொண்டுள்ளன. தற்செயலாக, மராத்வாடாவில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் வாராந்திர நேர்மறை விகிதம் (24%), விதர்பாவில் அகோலா (23%) உள்ளன. அமைச்சரவையில் வழங்கப்பட்ட தரவுகளின்படி மும்பையின் புறநகர்ப்பகுதிகளில் விகிதம் 7.6% ஆகும்.
மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் ஞாயிற்றுக்கிழமை 11,000 ஐத் தாண்டி யது.இன்று மட்டும், 38 இறப்புகளுடன் 11,141 புதிய பாதிப்புகள் அதிகரித்துள்ளன.
மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறும் போது :-
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு உண்மையில் ஆபத்தானது . தேவைபட்டால் சில மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும். ஊரடங்கை முடிவு செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு நாங்கள் அதிகாரம் அளித்துள்ளோம்.மக்கள் கொரோனா விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story