உலக தரம்வாய்ந்த சுற்றுலா தலமாக நந்திமலையை மாற்ற கர்நாடக அரசு நடவடிக்கை


உலக தரம்வாய்ந்த சுற்றுலா தலமாக நந்திமலையை மாற்ற கர்நாடக அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 9 March 2021 7:03 AM IST (Updated: 9 March 2021 7:03 AM IST)
t-max-icont-min-icon

உலக தரம்வாய்ந்த சுற்றுலா தலமாக நந்திமலையை மாற்ற கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் 2021-22-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா தாக்கல் செய்த பட்ஜெட்டில், சிக்பள்ளாப்பூரில் உள்ள நந்திமலை, சிக்கமகளூருவில் உள்ள கெம்மன்குந்தி ஆகிய சுற்றுலா தலங்கள், தோட்டக்கலைத்துறையிடம் இருந்து கர்நாடக சுற்றுலா வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த 2 சுற்றுலா தலங்களும், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல் உத்தரகன்னடா மாவட்டம் தடதியில் 1,000 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும் என்றும், மறைந்த மடாதிபதிகள் சிவக்குமார சாமி, பெஜாவர் விஸ்வேசுவர தீர்த்த சாமி ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story