மும்பை தாராவியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு


மும்பை தாராவியில்  மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 9 March 2021 7:26 AM IST (Updated: 9 March 2021 7:26 AM IST)
t-max-icont-min-icon

தாராவியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை, 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தது. அதன்பிறகு அங்கு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. குறிப்பாக கடந்த 3 மாதங்களாக அங்கு பாதிப்பு ஒற்றை இலக்கங்களில் தான் இருந்து வந்தது. சில நாட்கள் ஒருவா் கூட பாதிக்கப்படாமல் இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அங்கு புதிதாக 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அக்டோபருக்கு பிறகு அங்கு ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவை ஆகும். கடந்த மாதம் 26-ந் தேதி அங்கு 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனா்.

தற்போது வரை தாராவியில் 4 ஆயிரத்து 166 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பரிசோதனையை அதிகப்படுத்தியதே தொர்று பாதிப்பு அதிகரித்தற்கான காரணம் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று
 பரவலை கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக மதவழிப்பாட்டு தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகிறோம்" என்றார்.

Next Story