வரலாறையும், எதிர்காலத்தையும் படைக்கும் திறன் பெற்றவர்கள் பெண்கள்; ராகுல் காந்தி புகழாரம்


வரலாறையும், எதிர்காலத்தையும் படைக்கும் திறன் பெற்றவர்கள் பெண்கள்; ராகுல் காந்தி புகழாரம்
x
தினத்தந்தி 9 March 2021 7:56 AM IST (Updated: 9 March 2021 7:56 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் வல்லமைமிக்க நேர்த்தியுடன் வரலாறு, எதிர்காலத்தைப் படைக்கும் திறன் பெற்றவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

பெண்கள் தின வாழ்த்து
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘பெண்கள் வல்லமைமிக்க நேர்த்தியுடன் வரலாறு, எதிர்காலத்தை உருவாக்கும் திறன் பெற்றவர்கள். யாரும் உங்களைத் தடுத்து நிறுத்த அனுமதிக்காதீர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், ‘நமது முன்னோர்கள் கனவு கண்ட இந்தியாவின் உண்மையான அடையாளத்தை அடைவதற்கு பெண்கள் சக்திதான் ஒரே வழி. ஒரு உண்மையான, சுதந்திரமான, பாதுகாப்பான, செழுமையான எதிர்காலத்தை அடைவதற்கு நாம் பெண்களுடன் நிற்போம், பெண்களுக்காக நிற்போம், அவர்களைப் பின்தொடர்வோம்’ என்று கூறியுள்ளது.

பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இந்தியில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘வக்கீல்கள், பைலட்கள், தொழில்முனைவோர், வீராங்கனைகள், டாக்டர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என்று பெண்களின் பங்கு அதிகரிக்க அதிகரிக்க, இந்த உலகம் மேலும் அழகாகவும், வலிமையாகவும் தோன்றும்.

பஞ்சாயத்து தலைவர்கள் முதல், முதல்-மந்திரி, பிரதமர் வரை பெண்களால் எப்படி அழகாகவும், வலிமையாகவும் நாட்டை வழிநடத்த முடியும் என்பதை இந்தியாவில் பெண்களின் தலைமை காட்டியுள்ளது.

காங்கிரசின் கொள்கைகளால், நாட்டின் உள்ளாட்சி அமைப்பு அமைப்புகளில் பெண்களின் தலைமைத்துவம் வலுப்பெற்றிருப்பதில் நான் பெருமை அடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story