இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி


இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 March 2021 12:49 PM IST (Updated: 9 March 2021 12:49 PM IST)
t-max-icont-min-icon

இந்தி நடிகர் ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் உள்பட அனைத்து தரப்பினரும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல இந்தி நடிகரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை அவரது தாயார் நீது கபூர் இன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்ட பதிவில், ரன்பீருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார். அவர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

ரன்பீர் கபூர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் பிரார்த்தனை மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.       

Next Story