நந்திகிராமில் பிளவு அரசியல் எடுபடாது- மம்தா பானர்ஜி ஆவேசம்


நந்திகிராமில் பிளவு அரசியல் எடுபடாது- மம்தா பானர்ஜி  ஆவேசம்
x
தினத்தந்தி 9 March 2021 5:15 PM IST (Updated: 9 March 2021 5:15 PM IST)
t-max-icont-min-icon

நந்திகிராமில் பிளவு அரசியல் எடுபடாது.பாஜக நம்மை இந்து-முஸ்லீம் என்ற பெயரில் பிரிக்க விரும்புகிறது என மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது பவானிபூரில் எம்எல்ஏவாக இருந்து வருகிறார். கடந்த 2 முறையும் அந்தத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மம்தா பானர்ஜி இந்த முறை நந்திகிராம் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

நந்திகிராம் தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி கூறியதாவது:-

நான் வேட்பு மனுவை தாக்கல் செய்ய  நீங்கள் விரும்பவில்லை என்றால், நான்  தாக்கல் செய்ய மாட்டேன், ஆனால் நீங்கள் என்னை உங்கள் மகள் என்று கருதினால், நான் எனது வேட்புமனுவை தாக்கல் செய்வேன்.

குஜராத்தில் இருந்து வருபவர்கள் சிலருக்கு நான் வெளிநாட்டவராக இருக்கலாம்.

வகுப்புவாத விளையாட்டை  விளையாடுபவர்கள் நந்திகிராம் இயக்கத்தை அவமதிக்கின்றனர்.

நந்திகிராமில் பிளவு அரசியல் எடுபடாது.பாஜக நம்மை  இந்து-முஸ்லீம் என்ற பெயரில் பிரிக்க விரும்புகிறது என அவர் கூறினார்.

Next Story