230 முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்கி வருகிறது - கிஷன் ரெட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 10 March 2021 2:06 AM IST (Updated: 10 March 2021 2:06 AM IST)
t-max-icont-min-icon

இசட் பிளஸ், இசட், ஒய் பிரிவில் 230 முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

புதுடெல்லி, 

உச்சகட்ட பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவின்கீழ் உள்ளவர்கள் எங்கு சென்றாலும் 22-30 கமாண்டோக்கள் உடன் செல்வார்கள். இசட் பிரிவில் 15-18 பேர் பாதுகாப்பும்,. ஒய் பிளஸ் பிரிவில் 8-12 பேர் பாதுகாப்பும், ஒய் பிரிவில் 6-10 கமாண்டோக்கள் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டில் 230 முக்கிய பிரமுகர்களுக்கு இசட் பிளஸ், இசட், ஒய் பிரிவுகளின் மத்திய ஆயுதப்படை போலீசார், மத்திய ரிசர்வ் படை போலீசார், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறை ராஜாங்க மந்திரி ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார். 

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் மேலும் அவர் கூறுகையில், “மத்திய பாதுகாப்பு அமைப்பின் அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில், மத்திய படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அவ்வப்போது இது மதிப்பாய்வு செய்யப்படுகிறது. அத்தகைய மதிப்பாய்வுக்கு பின்னர் குறிப்பிட்ட நபருக்கு பாதுகாப்பு தொடரும் அல்லது திரும்பப்பெறப்படும் அல்லது மாற்றி அமைக்கப்படும். எனவே எத்தனை பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்ற எண்ணிக்கை அவ்வப்போது மாறும். இந்த பாதுகாப்பு செலவை அரசு ஏற்கிறது” எனவும் தெரிவித்தார்.

Next Story