தேசிய செய்திகள்

நாட்டில் 42 பயங்கரவாத அமைப்புகள்; மத்திய அரசு அறிவிப்பு + "||" + 42 terrorist organizations in the country; Federal Government Notice

நாட்டில் 42 பயங்கரவாத அமைப்புகள்; மத்திய அரசு அறிவிப்பு

நாட்டில் 42 பயங்கரவாத அமைப்புகள்; மத்திய அரசு அறிவிப்பு
நாட்டில் 42 அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள அமைப்புகளில் 42 அமைப்புகளை மத்திய அரசு பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்துள்ளன என்று மத்திய உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.  இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய அரசு 42 அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்துள்ளன.

அந்த அமைப்புகளின் பெயர்களை சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967ன்படி பட்டியலிட்டு உள்ளது.  எல்லை வழியே இந்தியாவில் பயங்கரவாதம் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, பிரிவினைவாதிகள், கல் வீசுபவர்கள் என 627 பேர் பல்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அவர்களில், சீரான ஆய்வு அடிப்படையிலும் மற்றும் நடப்பு நிலைமைக்கு ஏற்ப 454 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டு உள்ளனர் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாரும் வீட்டு சிறையில் வைக்கப்படவில்லை என்று காஷ்மீர் அரசு தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இடியுடன் கூடிய மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
2. கேரள பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படமாட்டாது; கல்வித்துறை அறிவிப்பு
கேரளாவில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படமாட்டாது என கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
3. மராட்டியத்தில் வரும் அக்டோபர் 22 முதல் அனைத்து திரையரங்குகளும் மீண்டும் திறப்பு
மராட்டியத்தில் வரும் அக்டோபர் 22ந்தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் மீண்டும் திறக்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.
4. என்ஜினீயரிங் கல்லூரிகளில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு
என்ஜினீயரிங் கல்லூரிகளில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
5. மராட்டியம்: வரும் அக்டோபர் 7 முதல் அனைத்து கோவில்களும் மீண்டும் திறப்பு
மராட்டியத்தில் வரும் அக்டோபர் 7 முதல் அனைத்து கோவில்களும் மீண்டும் திறக்கப்படும் என முதல்-மந்திரி அறிவித்து உள்ளார்.