பெட்ரோல், டீசலில் இருந்து அரசு அதிக வருவாய் ஈட்டுவது தெளிவாகியுள்ளது - ராகுல் காந்தி


பெட்ரோல், டீசலில் இருந்து அரசு அதிக வருவாய் ஈட்டுவது தெளிவாகியுள்ளது - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 10 March 2021 2:26 AM GMT (Updated: 10 March 2021 2:26 AM GMT)

பெட்ரோல், டீசலில் இருந்து அரசு அதிக வருவாய் ஈட்டுவது தெளிவாகியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.‌

இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலில் இருந்து அரசு அதிக வருவாய் ஈட்டுவது பற்றிய உண்மை தற்போது தெளிவாகி இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "பொதுமக்களிடமிருந்து கியாஸ், பெட்ரோல் மற்றும் டீசல் மீது கண்மூடித்தனமாக வரி வசூலிப்புதன் மூலம் மத்திய அரசு தனது நண்பர்களின் வரிகளையும், கடன்களையும் தள்ளுபடி செய்கிறது என்கிற உண்மை தெளிவாக உள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும் அவர் நாடாளுமன்றத்தில் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அளித்த பதிலை சுட்டிக்காட்டி கடந்த 7 ஆண்டுகளில் கியாஸ் சிலிண்டர் விலை இரட்டிப்பாகிவிட்டன என்றும் அதே காலகட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூல் 459 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Next Story