அரியானாவில் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பா.ஜ.க வெற்றி


அரியானாவில் காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பா.ஜ.க வெற்றி
x
தினத்தந்தி 10 March 2021 12:07 PM GMT (Updated: 10 March 2021 12:07 PM GMT)

அரியானா பா.ஜ.க அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபையில் தோல்வி அடைந்தது

புதுடெல்லி

அரியானாவில்  மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜனதா - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி  ஆட்சி நடைபெற்று வருகிறது.  பா.ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.32 எம்.எல்.ஏக்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தனர். 55 எம்.எல்.ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். சிர்சா கோபால் காந்தாவைச் சேர்ந்த அரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ பாஜக-ஜேஜேபி கூட்டணியை ஆதரித்து ஓட்டளித்தார்.

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபையில் பாஜகவுக்கு மட்டும் 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் மற்றும் ஐந்து சுயேட்சை எம்.எல்.ஏகளின்  ஆதரவும் உள்ளது.அரசை ஆதரிக்கும் இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை வாபஸ் பெற்றதாகக் கூறி, காங்கிரஸ் இந்த தீர்மானத்தை முன்வைத்தது.

'நம்பிக்கையில்லா' தீர்மானம்   குறித்து சபையில் மனோகர் லால் கட்டார்  பேசும் போது கூறியதாவது:-

அவநம்பிக்கை கலாச்சாரம் என்பது ஒரு பழைய காங்கிரஸ் பாரம்பரியம். இந்த அவநம்பிக்கையை  அவர்கள் கட்சிக்குள்ளேயே காண முடியும் அதனால் தான் பி.சி.சாக்கோ கட்சியை விட்டு வெளியேறினார். நம்பிக்கை இல்லை என்பது காங்கிரசின் கலாச்சாரம். மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்  மீது நம்பிக்கை இல்லை, இந்திய நடத்திய துல்லிய தாக்குதல்கள் மீது நம்பிக்கை இல்லை , அது ஆதாரங்களைக் கேட்டது .

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால், அவர்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் அது பாஜக என்றால், இல்லை.

நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பின் நம்பிக்கையை வெல்ல மாட்டோம், ஆனால் மக்களின் நம்பிக்கையை வெல்வோம். இதுபோன்ற  தீர்மானங்களை  ஆறு மாதங்களுக்குப் பிறகு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

Next Story