பஞ்சாப் மாநிலத்தில் 169 நாட்களாக நடந்த ரெயில் மறியல் வாபஸ்


பஞ்சாப் மாநிலத்தில் 169 நாட்களாக நடந்த ரெயில் மறியல் வாபஸ்
x
தினத்தந்தி 11 March 2021 7:30 PM GMT (Updated: 11 March 2021 7:30 PM GMT)

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே டெல்லி வழித்தடத்தில் தேவிதாஸ்பூர் என்ற இடத்தில் விவசாயிகள் சிலர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். 169 நாட்களாக நீடித்த இந்த போராட்டத்தை விவசாயிகள் நேற்று வாபஸ் பெற்றனர்.

இதுகுறித்து போராட்டத்தை நடத்திய கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் தலைவர் சவிந்தர்சிங் கூறியதாவது:-

நாங்கள் பயணிகள் ரெயில்களை மட்டுமே மறித்து வந்தோம். ஆனால், மத்திய அரசு, அந்த வழித்தடத்தில் சரக்கு ரெயில்களையும் நிறுத்தி விட்டது. இதனால், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டது.

ஆகவே, இந்த போராட்டத்தை வாபஸ் பெற ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, அந்த வழித்தடத்தில் ஓரிரு நாளில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Next Story