தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்று; கர்நாடகத்தில் புதிதாக 783 பேருக்கு கொரோனா பாதிப்பு


தொடர்ந்து அதிகரிக்கும் வைரஸ் தொற்று; கர்நாடகத்தில் புதிதாக 783 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 11 March 2021 9:57 PM GMT (Updated: 11 March 2021 9:57 PM GMT)

கர்நாடகத்தில் புதிதாக 783 பேருக்கு கொரோனா பாாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மொத்த எண்ணிக்கை

கர்நாடகத்தில் நேற்று 73 ஆயிரத்து 101 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 783 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 57 ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் நேற்று 406 பேர் குணம் அடைந்தனர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 37 ஆயிரத்து 353 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 7 ஆயிரத்து 831 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவுகளில் 110 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 492 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு

தட்சிண கன்னடாவில் 11 பேர், கலபுரகியில் 20 பேர், மைசூருவில் 50 பேர், துமகூருவில் 36 பேர், உடுப்பியில் 14 பேர், தார்வாரில் 15 பேர், பீதரில் 20 பேர், பெங்களூரு புறநகரில் 21 பேர், பல்லாரியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 2 பேர், தார்வார், மைசூருவில் தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். மாநிலத்தில் நேற்று 3-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ் நேற்று 2 லட்சத்து 47 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கொரோனாவின் 2-வது அலை தொடக்கத்தின் அறிகுறியாக இருக்குமோ என்று மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.


Next Story