மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது - தேவேகவுடா


மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது - தேவேகவுடா
x
தினத்தந்தி 11 March 2021 10:18 PM GMT (Updated: 11 March 2021 10:18 PM GMT)

மேற்குவங்காள முதல்-மந்திரியான சகோதரி மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

மேற்குவங்காள சட்டசபை தேர்தலையொட்டி அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்தார். அப்போது அவர் மீது நேற்று முன்தினம் மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

மேற்குவங்காள முதல்-மந்திரியான சகோதரி மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. அவர் விரைவாக குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 

நாம் தேர்தலை எதிர்கொள்கிறோம். அதில் சில நேரங்களில் வெற்றி பெறுகிறோம். சில நேரங்களில் தோல்வி அடைகிறோம். ஆனால் வன்முறை, ஜனநாயகத்தை பாதிப்பு அடைய செய்கிறது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். அமைதி காப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

Next Story