கொரோனா பரவல் எதிரொலி: பஞ்சாப்பில் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் மூடல்


கொரோனா பரவல் எதிரொலி: பஞ்சாப்பில் அங்கன்வாடி மையங்கள் மீண்டும் மூடல்
x
தினத்தந்தி 13 March 2021 6:36 PM GMT (Updated: 13 March 2021 6:36 PM GMT)

பஞ்சாப்பில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த அங்கன்வாடி மையங்கள் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் தற்போது பஞ்சாப்பில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

அங்கு நேற்று முன்தினம் மட்டும் 1,400-க்கும் அதிகமானோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர். 34 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் தொற்று வேகமெடுத்து வரும் மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்றாக உள்ளது.

எனவே மாநிலம் முழுவதும் அங்கன்வாடி மையங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. அடுத்த உத்தரவு வரும்வரை அங்கன்வாடி மையங்களை மூடுமாக மாநில சமூக பாதுகாப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி அருணா சவுத்ரி அறிவிப்பு வெளியிட்டார்.

எனினும் அங்கன்வாடிகளால் பயன்பெற்று வந்த குழந்தைகளுக்கான ரேஷன் பொருட்கள், ஊட்டச்சத்து உணவுகள் போன்றவை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் வீடு வீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


Next Story