கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடகத்தில் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறையா? துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில்


கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடகத்தில் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறையா? துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதில்
x

கொரோனா பரவல் அதிகரிப்பால் கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பதிலளித்துள்ளார்.

கல்லூரிகளுக்கு விடுமுறை

கர்நாடகத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் 15 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவலை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கல்லூரிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது. கல்லூரிகளுக்கு விடுமுறை எண்ணம் அரசுக்கு இல்லை. விஷமிகள் யாரோ சிலர், அரசின் சுற்றறிக்கை போலியாக தயாரித்து வெளியிட்டுள்ளனர். அது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

விளையாடக்கூடாது

அரசின் பெயரில் போலி அறிக்கையை தயாரித்து வெளியிடுவது பெரிய குற்றம். அதனால் இதுகுறித்து அந்த விஷயமிகளை உடனே கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளோம். மாணவர்களின் எதிர்காலத்துடன் யாரும் விளையாடக்கூடாது. ஏற்கனவே கொரோனா பயம் உள்ளது. கல்வி நடைமுறை தடம் புரளாமல் செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. ஆனால் சிலர் இத்தகைய தவறான விஷயங்களை பரப்புவது என்து கண்டிக்கத்தக்கது. அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.


Next Story