தேசிய செய்திகள்

ஆந்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களை கைப்பற்றிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் + "||" + Andhra Pradesh Local Elections; The ruling YSR Congress won more seats

ஆந்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களை கைப்பற்றிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

ஆந்திர பிரதேச உள்ளாட்சி தேர்தல்; அதிக இடங்களை கைப்பற்றிய ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்
ஆந்திர பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பெருவாரியான இடங்களை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.
அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த புதன்கிழமை நடந்து முடிந்தது.  இதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதில், முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.  மொத்தம் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில், 11 மாநகராட்சிகளையும், 73 நகராட்சிகளையும் அக்கட்சி கைப்பற்றி இருக்கிறது.  எலூரு மாநகராட்சிக்கான வாக்கு எண்ணிக்கை உயர் நீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கு தேச கட்சியானது, தடிபத்ரி மற்றும் மைதுகூரு ஆகிய நகராட்சிகளில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  பா.ஜ.க., ஜே.எஸ்.பி., சி.பி.ஐ. மற்றும் சி.பி.எம். ஆகிய பிற கட்சிகள் ஆந்திரா முழுவதும் ஒற்றை இலக்கத்திலேயே வார்டுகளை கைப்பற்றி உள்ளன.

மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 671 வார்டுகளில், 425 வார்டுகளை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது.  91 இடங்களில் போட்டியின்றி தேர்வு பெற்றது.  தெலுங்கு தேச கட்சி 80 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.  ஜே.எஸ்.பி. 7, சி.பி.எம். 2, சி.பி.ஐ. 1 மற்றும் பா.ஜ.க. 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி கொடி நாட்டிய காங்கிரஸ்
காஞ்சீபுரம் மாவட்டத்துக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியை 10 ஆண்டுக்கு பின்னர் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.
2. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தேர்தலில் வெற்றி பெற்றோரும் சந்தித்தனர்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
3. விடிய விடிய நடந்த வாக்கு எண்ணிக்கை: போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி
போடி தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நேற்று அதிகாலை வரை நீடித்தது. அதிக வாக்குகள் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 3-வது முறையாக இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
4. பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்
பேராவூரணியில் 54 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. வெற்றி: மாமனார் வென்ற தொகுதியை கைப்பற்றிய மருமகன்.
5. சட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து
சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.