தேசிய செய்திகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருங்கள்; கொரோனா தொற்று தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது; ராகுல் காந்தி எச்சரிக்கை + "||" + Corona infection continues to be a major threat; Rahul Gandhi warns

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருங்கள்; கொரோனா தொற்று தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது; ராகுல் காந்தி எச்சரிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடருங்கள்; கொரோனா தொற்று தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது; ராகுல் காந்தி எச்சரிக்கை
இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
புதிய பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால் மத்திய-மாநில அரசுகள் அதிர்ச்சியடைந்து உள்ளன. இந்த நிலையில் மக்கள் கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடருமாறு ராகுல் காந்தி அறிவுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘ஏற்கனவே எச்சரித்ததுபோல, கொரோனா தொற்று தொடர்ந்து பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தயவுசெய்து தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன். முககவசம் அணிந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் படிப்படியாக தொற்று அதிகரித்து வருவதை குறிக்கும் வரைபடம் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார்.இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை எனவும், ஆனால் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு அலட்சியமாகவும், அதீத நம்பிக்கையிலும் இருப்பதாகவும் சமீபத்தில் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கொரோனாவுக்கு ஒருவர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார்.
3. தமிழக அமைச்சர் கே மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிப்பு
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொரோனா வைரச் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. ஆந்திராவில் மேலும் 22,018- பேருக்கு கொரோனா தொற்று
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. சென்னை விமான நிலையத்தில் கொல்கத்தா செல்ல வந்த 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று; பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை விமான நிலையத்தில் பெங்களூரு வழியாக கொல்கத்தா செல்ல வந்த 3 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்ததால் அவர்களின் பயணத்தை ரத்து செய்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.