காங்கிரசில் இருந்து விலகிய பிசி சாக்கோ தேசியவாத காங்கிரசில் இணைகிறார்...!


காங்கிரசில் இருந்து விலகிய பிசி சாக்கோ தேசியவாத காங்கிரசில் இணைகிறார்...!
x
தினத்தந்தி 16 March 2021 11:59 AM GMT (Updated: 16 March 2021 11:59 AM GMT)

கேரளவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய பிசி சாக்கோ இன்று தேசியவாத காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிசி சாக்கோ கடந்த 10-ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரசில் இருந்து விலகியதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அனுப்பி வைத்தார்.

ஏப்ரல் 6-ம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சம்பவம் அம்மாநில காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் கோஷ்டி சண்டை நடக்கிறது. இந்த கோஷ்டி பூசலை மேலிடம் கண்டுகொள்ளாமல் வளர்க்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரசில் இருந்து விலகியதாக பிசி சாக்கோ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய பிசி சாக்கோ தேசியவாத காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இன்று புதுடெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து அக்கட்சியில் இணைய உள்ளார்.

தேசியவாத காங்கிரசில் இணைந்த பின்னர் பிசி சாக்கோ கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story