மத்திய பிரதேசத்தில் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய கலெக்டருக்கு கொரோனா + "||" + Jabalpur: District collector contracts Covid-19 after 1st dose of vaccine
மத்திய பிரதேசத்தில் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திய கலெக்டருக்கு கொரோனா
தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டருக்கு கொரோனா தாக்கி இருப்பது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜபல்பூர்,
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் கரம்வீர் சர்மா. இவர் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். ஆனால் 28 நாட்களுக்கு பிறகு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் ஒரு சிறிய தவறால், கொரோனா வைரஸ் தொற்றிக்கொண்டு விட்டது. இது எனது தனிப்பட்ட அனுபவம். ஜபல்பூர் பொதுமக்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, மேலும் 15 நாட்கள் முடிந்த பின்னர்தான் கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வரும். அதுவரை முககவசம் மட்டுமே தடுப்பூசியாக செயல்படும்” என கூறி உள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டருக்கு கொரோனா தாக்கி இருப்பது மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.