மும்பை தாராவி பகுதியை மீண்டும் அச்சுறுத்தி வரும் கொரோனா


மும்பை தாராவி பகுதியை மீண்டும் அச்சுறுத்தி வரும் கொரோனா
x
தினத்தந்தி 16 March 2021 10:40 PM GMT (Updated: 16 March 2021 10:40 PM GMT)

தாராவியில் ஒரேநாளில் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்து உள்ளது.

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கு உலக சுகாதார அமைப்பே பாராட்டு தெரிவித்து இருந்தது.இந்தநிலையில் தற்போது அங்கு மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக கடந்த சில நாட்களாக பாதிப்பு 10-க்கும் மேல் இருந்தது. நேற்று ஒரே நாளில் அங்கு புதிதாக 21 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தாராவியில் கடந்த அக்டோபர் 6-ந் தேதி 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது 5 மாதங்களுக்கு பிறகு அங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

தாராவியில் இதுவரை 4 ஆயிரத்து 279 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து உள்ளனர். இங்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 150 ஆக உயர்ந்து உள்ளது.இதேபோல தாதரில் புதிதாக 18 பேருக்கும், மாகிமில் 24 பேருக்கும் வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் முறையே இதுவரை 5 ஆயிரத்து 293 பேர், 5 ஆயிரத்து 214 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story