மராட்டியத்தில் அரசு பள்ளியில் மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைத்த அவலம்


மராட்டியத்தில் அரசு பள்ளியில் மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைத்த அவலம்
x
தினத்தந்தி 19 March 2021 1:26 PM GMT (Updated: 19 March 2021 1:26 PM GMT)

மராட்டியத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைக்கப்பட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

புனே,

மராட்டியத்தில் கொரோனாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டு உள்ள சூழலில், அரசு பள்ளியில் மதிய உணவு உண்ணும் மாணவர்களின் நலன்களுக்காக பள்ளிக்கு மதிய உணவு வழக்கம்போல் அனுப்பி வைக்கப்படும்.

அவற்றை மாணவர்கள் பெற்று கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில், புனே நகரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மதிய உணவு அனுப்பி வைப்பதற்கு பதில் கால்நடை தீவனம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி புனே நகர மேயர் கூறும்பொழுது, மதிய உணவு திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  மாநகராட்சிக்கு அவற்றை மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் பொறுப்பு மட்டுமே உள்ளது.  இது துரதிர்ஷ்டவசமாக நடந்துள்ளது.  இதுபற்றி விசாரணை நடத்த கோரியுள்ளோம் என கூறியுள்ளார்.

அரசு பள்ளிகளில் பெருமளவில் ஏழை மாணவர்கள் பயிலும் சூழலில், அவர்கள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக வழங்கப்படும் மதிய உணவுக்கு பதிலாக, கால்நடைகள் உண்ண கூடிய தீவனம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story