தேசிய செய்திகள்

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்: ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தல் + "||" + Vaccination is another one. Urge all those who are eligible to get vaccinated: Union Health Minister Harsh Vardhan

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்: ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தல்

தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்: ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தல்
தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,

கொரோனா வைரசின் 2-வது அலை இந்தியாவை மிரட்டி வருகிறது.  மராட்டியம், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

 கொரோனாவுக்குஎதிரான தடுப்பூசி போடும் பணி ஒருபக்கம் நடந்து வருகிறது. எனினும், கொரோனா அச்சுறுத்தலும்  அடங்காததால், மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் மாவட்ட அளவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்  அமல்படுத்தப்பட்டு வருகின்றன.  

இந்த நிலையில், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறியதாவது: - கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு கவசங்களை கைவிட்டு விடக்கூடாது என நாட்டு மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். 

அதாவது, சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை தவறாது பின்பற்ற வேண்டும். கொரோனாவுக்கு இதுதான் நமது முக்கியமான கருவியாகும். தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் - சர்வதேச நிதியம், உலக வங்கி வலியுறுத்தல்
எல்லா நாடுகளுக்கும் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சர்வதேச நிதியமும், உலக வங்கியும் வலியுறுத்தி உள்ளன.
2. உலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை
உலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசிகளை போட்டு இந்தியா சாதனை படைத்துள்ளது.
3. கொரோனா பரவல் அதிகரிப்பால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
4. டெல்லியில் நேற்றை விட சற்று குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருப்பதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை நெருங்கியது
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.