தேசிய செய்திகள்

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு + "||" + Punjab farm union leader Joginder Singh Ugrahan tests positive for Covid-19

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் பஞ்சாப் விவசாயிகள் சங்கத்தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சண்டிகர், 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளின் சங்கங்களில் ஒன்று, பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா-உக்ரகன்). இதன் தலைவரான, 75 வயதாகும் ஜோகிந்தர் சிங் உக்ரகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜோகிந்தர் சிங் வெளியிட்ட ஒரு வீடியோ செய்தியில், ‘எனக்கு கொரானோ தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நலமாக உள்ளேன். விரைவில் விவசாயிகள் போராட்டத்தில் மீண்டும் இணைவேன். கவலைப்படத் தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சிகிச்சைபெற்று வரும் மருத்துவமனையின் டாக்டர் குல்விந்தர் சிங் கூறுகையில், “புதன்கிழமை மாலை காய்ச்சல் மற்றும் கடுமையான மூச்சுத் திணறலுடன் ஜோகிந்தர் சிங் உக்ரகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது நலமாக உள்ளார். அவர் சிகிச்சைக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து வருகிறார். கொரோனா நெறிமுறையின்படி மாவட்ட அதிகாரிகளுக்கு முறையாக அறிவிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின்
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.
2. டெல்லியில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 273 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் புதிதாக 17,364 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 332 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,364 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் ஊடக பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் அனைத்து ஊடக பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
5. டெல்லியில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 338 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை