தேசிய செய்திகள்

பஞ்சாப்: சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு + "||" + A speeding Mercedes car killed three people in Punjab

பஞ்சாப்: சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

பஞ்சாப்: சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
பஞ்சாப்பில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் கார் மற்றும் சைக்கிளில் சென்றவர்கள் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மொஹாலியில் உள்ள ராதா சௌமி சட்ஷங் சவுக் சாலையில் நேற்று வழக்கமான பரபரப்புடன் வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அந்த சாலையில் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்த சொகுசு கார் சாலையின் மறுபுறும் வந்துகொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அதன்பின்னும் தொடர்ந்து வேகமாக சென்ற சொகுசு கார் சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவர் மீதும் மோதி சாலை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதையில் உள்ள இரும்பு கம்பி மீது மோதி நின்றது.

இந்த பயங்கர விபத்தில் சாலையின் எதிர்புறத்தில் இருந்து வந்துகொண்டிருந்த காரில் இருந்தவர்களில் 2 பேரும், சைக்கிளில் பயணித்த 1 நபரும் என மொத்தம் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். பயமடைந்தவர்களை மீண்ட பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த
விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரில் இருந்த டிரைவர் உள்பட 3 பேர் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக சொகுசுகாரை ஓட்டிய டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். எஞ்சிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களில் 2 பேர் தனியார் நிறுவனத்தில் இரவு நேரப்பணியை முடித்துவிட்டு நிறுவனத்திற்கு சொந்தமான காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
2. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,673 பேருக்கு கொரோனா
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,316 ஆக உயர்ந்துள்ளது.
3. பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 59 பேர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
4. பெயர் மாற்றம் பஞ்சாப் அணிக்கு பேரின்பம் அளிக்குமா?
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.
5. பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா
பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.