தேசிய செய்திகள்

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம் + "||" + India ranked fourth most powerful military in world: Miltary Direct's study

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியாவுக்கு 4-வது இடம்
உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி, 

உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.

உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள், ‘மிலிட்டரி ரைடக்ட்’ என்ற ராணுவ இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டன.

ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி, சுறுசுறுப்பான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை, மொத்த வான்படை, கடற்படை, தரைப்படை, அணுஆயுத பலம், சராசரி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் ராணுவ வலிமை குறியீட்டு எண் தயாரிக்கப்பட்டது.

அந்த ராணுவ வலிமை குறியீட்டின்படி, 100 புள்ளிகளுக்கு 82 புள்ளிகள் எடுத்து சீனா முதலிடத்தில் உள்ளது. 74 புள்ளிகளுடன் அமெரிக்கா 2-ம் இடத்திலும், 69 புள்ளிகளுடன் ரஷியா 3-ம் இடத்திலும், 61 புள்ளிகளுடன் இந்தியா 4-ம் இடத்திலும், 58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5-ம் இடத்திலும், 43 புள்ளிகளுடன் இங்கிலாந்து 9-ம் இடத்திலும் உள்ளன.

ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ராணுவ வலிமையில் அந்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, ராணுவத்துக்கு ஆண்டுக்கு 73 ஆயிரத்து 200 கோடி டாலர் செலவிடுகிறது. சீனா, 26 ஆயிரத்து 100 கோடி டாலரும், இந்தியா 7 ஆயிரத்து 100 கோடி டாலரும் செலவிடுகின்றன.

போர் வருவதாக யூகித்துக்கொண்டால், 14 ஆயிரத்து 141 விமானங்கள் கொண்ட அமெரிக்கா வான்வழி போரில் வெற்றி பெறும். 406 கப்பல்கள் கொண்ட சீனா, கடல்வழி போரில் வெற்றி பெறும். 54 ஆயிரத்து 866 ராணுவ வாகனங்கள் கொண்ட ரஷியா, தரைவழி போரில் வெற்றி பெறும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கல்வான் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம்: இந்தியா
பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்துக்கு சீனாவின் ஆத்திரமூட்டும் நடத்தையே காரணம் என அந்த நாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்து உள்ளது.
2. அஜித்தின் அசத்தல் வசனங்கள்.... மிரள வைக்கும் பைக் சேஸிங் - வைரலாகும் ‘வலிமை’ கிளிம்ப்ஸ்
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ‘உங்களை வரவேற்க இந்திய மக்கள் காத்திருக்கிறார்கள்’: கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவுக்கு வருமாறு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
4. எந்த நாடும் செய்ய முடியாததை இந்தியா செய்திருப்பது மகிழ்ச்சி; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு
கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
5. தாஜ்மகாலில் அஜித் குமார்
நடிகர் அஜித்குமார் ஓய்வு கிடைக்கும்போது பைக்கில் பயணம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சிக்கிம் வரை பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் சென்று வந்தார்.